/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பெண் கொடுமை வழக்கில் இரண்டாவது கணவர் கைது
/
பெண் கொடுமை வழக்கில் இரண்டாவது கணவர் கைது
ADDED : பிப் 18, 2025 07:13 AM
ஓமலுார்: பெண் கொடுமை வழக்கில், இரண்டாவது கணவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ஓமலுார் ஆர்.சி.,செட்டிப்பட்டியை சேர்ந்தவர் சத்தியகலா, 27. ஜவுளி கடையில் பணிபுரியும் இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், தனது கணவரை விவாகரத்து செய்து தனியாக வசித்து வந்துள்ளார். கடந்து இரண்டு ஆண்டுகளாக கணவரின் உறவினரான, காடையாம்பட்டி தாலுகா வேடப்பன் காட்டுவளவு பகுதியை சேர்ந்த மதிவாணன், 32, என்பவருடன் பழக்கம் ஏற்-பட்டுள்ளது.
மதிவாணன் தனது மனைவியை விவாகரத்து செய்-துள்ளதாக கூறி, சத்தியகலாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.ஆனால், கடந்த சில வாரங்களாக மதிவாணன், தனது முதல் மனைவியுடன் சேர்ந்து கொண்டு, தன்னை கொடு-மைப்படுத்துவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும், சத்-தியகலா நேற்று ஓமலுார் போலீசில் புகார் அளித்தார். அதன்படி, பெண் கொடுமை வழக்கில், மதிவாணனை நேற்று இரவு ஓமலுார் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

