/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஸ்கூட்டி, பணத்துடன் 2வது மனைவி மாயம்
/
ஸ்கூட்டி, பணத்துடன் 2வது மனைவி மாயம்
ADDED : செப் 16, 2025 01:40 AM
சேலம், சேலம், சூரமங்கலம், மல்லமூப்பம்பட்டியை சேர்ந்தவர் முருகசேன், 45. இவருக்கு மனைவி விஜயலட்சுமி, இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் முருகேசன், கவிதா, 37, என்பவரை, 2ம் திருமணம் செய்து கொண்டு, அவருடன் குடும்பம் நடத்தி வந்தார்.
ஆனால் கடந்த, 11ல் முருகேசன் வீட்டுக்கு வந்தபோது, கவிதாவை காணவில்லை. வீட்டில் இருந்த, 15,000 ரூபாய், ஸ்கூட்டியும் இல்லாதது தெரிந்தது. மேலும் எங்கு தேடியும் கவிதாவை காணவில்லை. வீட்டில் ஒரு கடிதம் கிடைத்தது. அதில், 'நான் வீட்டை விட்டு செல்கிறேன். என்னை தேட வேண்டாம்' என எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து முருகேசன் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
அதேபோல் ஆத்துார் அருகே அப்பமசமுத்திரம் ஊராட்சி, பாலிகாட்டை சேர்ந்தவர் சவுந்தர்யா, 19. பிளஸ் 2 படித்துவிட்டு வீட்டில் இருந்த இவரை, நேற்று முன்தினம் முதல் காணவில்லை. இதுகுறித்து அவரது தந்தை பிரபு புகார்படி, ஆத்துார் ஊரக போலீசார் தேடுகின்றனர்.