/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காங்., கட்சியை வலுப்படுத்த நிர்வாகிகளிடம் கருத்து கேட்பு: அகில இந்திய பார்வையாளர்

ADDED : நவ 25, 2025 02:08 AM
ஓமலுார், ''திறமையான மாவட்ட தலைவர்களை தேர்வு செய்ய, கட்சி தொண்டர்களின் கருத்துகளை கேட்டு வருகிறோம், '' என, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பார்வையாளர் ேஷாபா ஓஷா கூறினார்.
காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவர்களை தேர்வு செய்யவும், கட்சியை வலுப்படுத்தும் அமைப்பு மறுசீரமைப்பு இயக்கம் சார்பில், ஆலோசனை கூட்டம் சேலம் மாவட்டம், ஓமலுாரில் நேற்று நடந்தது. கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பார்வையாளர் ேஷாபா ஓஷா பங்கேற்று, கட்சி தொண்டர்களிடம் நேரடியாக கருத்துகளை கேட்டார். ஓமலுார், மேட்டூர், இடைப்பாடி ஆகிய சட்டசபை தொகுதிகளுக்குட்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். மேற்கு மாவட்ட தற்போதைய தலைவர் ஜெயக்குமார், முன்னாள் தலைவர்கள் முருகன், கோபால் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
பின்னர் பார்வையாளர் ேஷாபா ஓஷா கூறுகையில்,'' தமிழகத்தில் காங்., கட்சியை மறுசீரமைப்பு செய்து, கட்சியை வலுப்பெற செய்ய வேண்டும் என்பதற்காக, மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் தலைவர்கள் யார் என ஒன்றிய, நகர நிர்வாகிகளிடம் நேரடியாக தனித்தனியாக கருத்து கேட்கப்பட்டது. இது போல் பல்வேறு மாநிலங்களில் நடந்து வருகிறது. கருத்துகளை கேட்டு மேலிடம் முடிவின்படி, பின்னர் புதிய மாவட்ட தலைவர்கள் யார் என அறிவிக்கப்படும்,'' என்றார்.
தமிழ்நாடு காங்., கமிட்டி பார்வையாளர்கள் ஏகாம்பவானன், பச்சமுத்து, சித்திக் உடனிருந்தனர்.