/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கடையின் பூட்டை உடைத்து கவரிங் நகை திருட்டு
/
கடையின் பூட்டை உடைத்து கவரிங் நகை திருட்டு
ADDED : நவ 25, 2025 02:09 AM
சேலம், சேலம் பழைய சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சிவா, 31. இவர், கருப்பூர் தண்ணீர் தொட்டி பஸ் ஸ்டாப் அருகே, ஸ்ரீகந்தா காம்ப்ளக்சில் கவரிங் நகை விற்பனை மற்றும் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார்.கடந்த, 17ம் தேதி இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.
மறுநாள் காலை வந்து பார்த்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சியடைந்த சிவா உள்ளே சென்று பார்த்த போது, கவரிங் நகை செட், 2, நைட் டிரஸ், 25, சல்வார், லெக்கின்ஸ், 40, மற்றும் 3,500 ரூபாய் என, 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது.இது குறித்து கருப்பூர் போலீசில், நேற்று முன்தினம் சிவா கொடுத்த புகார்படி, இன்ஸ்பெக்டர் செல்வராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்,

