ADDED : மே 15, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர், மேட்டூர் அணை அடிவாரம் முதல் செக்கானுார் கதவணை வரை காவிரியாற்றில் இடைப்பாடி, ஆலச்சம்பாளையம் பகுதி மீனவர்கள், தள்ளுவலை பயன்படுத்தி மீன்பிடிப்பதாக புகார் எழுந்தது.
இதனால் மேட்டூர் மீன்வளத்துறை ஆய்வாளர் சுப்ரமணியன் உள்ளிட்ட குழுவினர், நேற்று சம்பவ இடத்தில் ஆய்வு செய்து, சட்டவிரோதமாக மீனவர்கள் பயன்படுத்திய, 15 தள்ளுவலைகளை பறிமுதல் செய்தனர்.
இதன் மொத்த மதிப்பு, 30,000 ரூபாய். அத்துடன், 50 கிலோ மீன்களையும் பறிமுதல் செய்தனர்.