ADDED : அக் 24, 2024 03:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் பகுதியில் சட்டவிரோத-மாக கிராவல் மண் கடத்துவதாக கிடைத்த தகவல்படி, வெள்ள-கோவில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அரி-யாண்டிவலசு அருகே, ஒரு டிப்பர் லாரியில் கிராவல் மண் கொண்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, லாரியை நிறுத்தி போலீசார் விசாரணை செய்தனர். அப்போது, ஓட்டுனர் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பினார். லாரி பறிமுதல் செய்யப்பட்டு, வெள்ளகோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.