sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

"மாஜி' அமைச்சர் கைது கண்டித்து சாலை மறியல்

/

"மாஜி' அமைச்சர் கைது கண்டித்து சாலை மறியல்

"மாஜி' அமைச்சர் கைது கண்டித்து சாலை மறியல்

"மாஜி' அமைச்சர் கைது கண்டித்து சாலை மறியல்


ADDED : ஜூலை 31, 2011 01:28 AM

Google News

ADDED : ஜூலை 31, 2011 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்தூர்: தி.மு.க., 'மாஜி' அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆத்தூர் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட தி.மு.க.,வினர், 120 பேரை, போலீஸார் கைது செய்தனர்.நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக, 'மாஜி' அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை, நேற்று போலீஸார் கைது செய்தனர்.

அதை கண்டித்து, ஆத்தூரில் சாலை மறியலில் ஈடுபட்ட நகர துணைச்செயலாளர் ராமச்சந்திரன், நகர்மன்ற குழு தலைவர் ஸ்டாலின் உள்பட, 52 பேர் கைது செய்யப்பட்டனர்.தலைவாசல் ஒன்றிய பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் ஒன்றிய பொறுப்பாளர் வரகூர் செயபாலன், ஒன்றிய செயலாளர் லட்சுமணன், முன்னாள் ஒன்றிய செயலாளர் அரங்கசாமி உள்பட, 22 பேர் கைது செய்யப்பட்டனர்.

கெங்கவல்லியில் சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் எம்.எல்.ஏ., சின்னதுரை, யூனியன் சேர்மன் காமராஜ், நகர செயலாளர்கள் கெங்கவல்லி முகமது ஷெரீப், தெடாவூர் செல்வராஜ், தம்மம்பட்டி ராஜா உள்பட, 65 பேர் கைது செய்யப்பட்டனர்.பெத்தநாயக்கன்பாளையத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமையிலான கட்சியினர் உள்பட, 35 பேர் கைது செய்யப்பட்டனர்.








      Dinamalar
      Follow us