/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் அணையில் இன்று தண்ணீர் திறப்பு
/
மேட்டூர் அணையில் இன்று தண்ணீர் திறப்பு
ADDED : ஆக 02, 2011 12:56 AM
சேலம் : மேட்டூர் அணையில் இருந்து, பாசனத்துக்காக இன்று தண்ணீர் திறந்து விடப்படுகிறது.இது குறித்து கலெக்டர் மகரபூஷணம் வெளியிட்ட அறிக்கை: சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று, தமிழக முதல்வர் தண்ணீர் திறப்பதற்கு உத்தரவிட்டார். அதன்படி, இன்று(2ம் தேதி) காலை தண்ணீர் திறக்கப்படுகிறது. தமிழக வேளாண் அமைச்சர் செங்கோட்டையன், பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கம், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி, வருவாய்த்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோர் பங்கேற்க உள்ளனர். தண்ணீர் திறப்பு மூலம், சேலம் மாவட்டத்தில், 18 ஆயிரம் ஏக்கர் நிலமும். ஈரோடு மாவட்டத்தில், 17 ஆயிரம் ஏக்கர் நிலமும், நாமக்கல் மாவட்டத்தில், 11 ஆயிரத்து, 500 ஏக்கர் நிலமும் பயனடையும். பாசனத்துக்காக, மேட்டூர் மேற்கு, கிழக்கு பகுதிகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.