sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பெண்களிடம் தாலியை நூதன முறையில் "அபேஸ்' செய்த கில்லாடி பெண் "எஸ்கேப்'

/

பெண்களிடம் தாலியை நூதன முறையில் "அபேஸ்' செய்த கில்லாடி பெண் "எஸ்கேப்'

பெண்களிடம் தாலியை நூதன முறையில் "அபேஸ்' செய்த கில்லாடி பெண் "எஸ்கேப்'

பெண்களிடம் தாலியை நூதன முறையில் "அபேஸ்' செய்த கில்லாடி பெண் "எஸ்கேப்'


ADDED : ஆக 12, 2011 01:30 AM

Google News

ADDED : ஆக 12, 2011 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தம்மம்பட்டி: தம்மம்பட்டி அருகே திருமணமான, 50க்கும் மேற்பட்ட பெண்களிடம், விருத்தாச்சலத்தை சேர்ந்த பெண் ஒருவர், நூதன முறையில் தாலியை, 'அபேஸ்' செய்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தம்மம்பட்டி அருகே கொண்டையம்பள்ளி கிராமம் உள்ளது. அதில், 3வது வார்டு மாரியம்மன் கோவில் பகுதியில், 300க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட சமுதாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த வைகாசி மாதம் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. அப்பகுதியை சேர்ந்த குள்ளு என்பவரது வீட்டுக்கு, கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் பகுதியை சேர்ந்த ராணி (35), அவரது கணவர் வெங்கடேஷ் (40) ஆகிய இருவரும் வந்துள்ளனர். அப்போது அங்குள்ள பொதுமக்களிடம், 'கஷ்டமான குடும்பத்தினர், திருமணமான பெண்களின் கழுத்தில் உள்ள தாலியை வீட்டின் பூஜை அறையில் வைத்து ரகசியமாக பூஜை நடத்த வேண்டும். அவ்வாறு செய்தால் வீட்டில் செல்வம் கொழிக்கும், கடன் தொல்லை நீங்கும்' என, தெரிவித்துள்ளனர். அதை நம்பிய அப்பாவி பெண்கள் பலர், ராணியிடம் கஷ்டத்தை தெரிவித்து விமோச்சனம் கேட்டுள்ளனர். அப்போது பெண்கள், தங்கள் கழுத்தில் அணிந்திருந்த கால் பவுன் முதல் முக்கால் பவுன் வரையிலான தாலி, செயின், தோடு, மூக்குத்தி, வெள்ளி கொலுசு, அரைஞான் கயிறு ஆகியவற்றை கொடுத்துள்ளனர்.



அதை வாங்கிய ராணி, தங்கியிருந்த வீட்டினுள் பூஜை செய்து, அருள் வாக்கும் தெரிவித்து வந்துள்ளார். ஒரு வாரம் கடந்த நிலையில், குழந்தைகளுக்கு மாற்றுச் சான்றிதழ் (டி.சி.,), வாங்கி பள்ளி சேர்த்துவிட்டு, கேரளாவில் உள்ள குருவை பார்த்து விட்டு வருவதாக கூறிவிட்டு ராணியும் அவரது கணவரும் கிளம்பியுள்ளனர். ஆனால், இதுநாள் வரை அவர்கள் வராததால், நகை கொடுத்து ஏமாந்த, 50க்கும் மேற்பட்ட பெண்கள், தம்பதியினர் தங்கியிருந்த வீட்டை திறந்து பார்த்துள்ளனர். அப்போது, பூஜைக்காக கொடுக்கப்பட்ட தாலி உள்ளிட்ட எந்த பொருட்களும் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தம்மம்பட்டி போலீஸாரிடம், பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தம்மம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








      Dinamalar
      Follow us