/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிண்டிகேட் வங்கி வாடிக்கையாளர் விழா
/
சிண்டிகேட் வங்கி வாடிக்கையாளர் விழா
ADDED : செப் 27, 2011 12:47 AM
சேலம்: சேலத்தில், சிண்டிகேட் வங்கியின் வாடிக்கையாளர் விழா கொண்டாடப்பட்டது.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் ஒன்றான சிண்டிகேட் வங்கி, வாடிக்கையாளர் மாதமாக, 'செப்டம்பர் 2011'ஐ கொண்டாடுகிறது. 2,550க்கும் மேற்பட்ட கிளைகளில் வாடிக்கையாளர் விழா நடக்கிறது. புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கும் விதமாக சேமிப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இன்ஸ்டன்ட் 'ஏடிஎம்' கார்டு சேவை, சிண்ட் சுரக்ஷா(குறைந்த பிரிமியம் கொண்ட இன்சூரன்ஸ்), குறுந்தகவல் வங்கி சேவை, உடனடி பணபரிமாற்றம்(எந்த வங்கிக்கும்) உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி கிளையில், வாடிக்கையாளர் விழா கொண்டாடப்பட்டது. வங்கி மேலாளர் தனராஜ் தலைமை வகித்தார். வங்கியின் சிறப்பு திட்டங்கள், சேவைகள் பற்றி விளக்கினார். உதவி மேலாளர் சீனிவாசன், ஜோசப் பவுல் மற்றும் வாடிக்கையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.