/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஜெய்ராம் பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு சுய பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

ADDED : ஜன 04, 2025 02:54 AM
ஜெய்ராம் பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு சுய பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சேலம், ஜன. 4-
சேலம், சின்னதிருப்பதி ஜெய்ராம் பப்ளிக் பள்ளியில், 4, 5ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, சுய பாதுகாப்பு, நன்னடத்தை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று நடந்தது.
பள்ளி தாளாளர்,  முதல்வர், ஆசிரியர்கள் முன்னிலையில், 'யங் இந்தியா' அமைப்பின் உறுப்பினர் நாகலட்சுமி மூலம் நடந்தது. இதில் மாணவ, மாணவியர், பள்ளி தோழர்கள் இடையே பழகும் நற்பண்பு, சகோதர மனப்பான்மை, பெரியோர்களிடம் மரியாதையாக நடந்து கொள்ளும் விதம், தனிப்பட்ட முறையில் மாணவ, மாணவியருக்கு ஏற்படும் விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கு தீர்வு காண, 1098 என்ற எண்ணை தொடர்பு கொள்ளும் விதம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.