/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தங்கம் வேல்டு பள்ளியில் வரும் 20, 21ல் கருத்தரங்கு
/
தங்கம் வேல்டு பள்ளியில் வரும் 20, 21ல் கருத்தரங்கு
தங்கம் வேல்டு பள்ளியில் வரும் 20, 21ல் கருத்தரங்கு
தங்கம் வேல்டு பள்ளியில் வரும் 20, 21ல் கருத்தரங்கு
ADDED : டிச 15, 2024 01:02 AM
அயோத்தியாப்பட்டணம், டிச. 15-
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள, தங்கம் வேல்டு பள்ளியில், 'நெக்ஸ்ட் ஜென் ஸ்கில் அண்ட் லீடர்ஷிப் கான்கிளேவ் 24' பெயரில், வரும், 20, 21ல் கல்வி கருத்தரங்கு நடக்க உள்ளது.
இதுகுறித்து தங்கம் வேல்டு பள்ளி இயக்குனர் ராஜா கூறியதாவது:
கருத்தரங்கின் முக்கிய நோக்கம், இன்றைய குழந்தைகளின் தலைமை பண்புகள், திறன் மேம்படுத்தல், மதிப்பு போன்றவற்றை சிறப்பாக மேம்படுத்துவதே. குறிப்பாக சமூக ஊடகங்களான வாட்ஸாப், இன்ஸ்டாகிராம், ஆன்லைன் விளையாட்டு போன்றவற்றில் இருந்து குழந்தைகளை மீட்க ஒரு களமாக இருக்கும். மதிப்பெண்களை தாண்டி, எதிர்காலத்தில் வெற்றி பெற ஏதுவாக இது அமையும்.
இதில், 20க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள், சமூக சிந்தனை பேச்சாளர்கள், தொழில் முனைவோர், பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். அவர்களிடம் நேரடியாக சந்தேகங்களை கேட்டறியலாம். யார் வேண்டுமானாலும், 2,000 பேர் வரை, இலவசமாக முன்பதிவு செய்து பங்கேற்கலாம். இந்நிகழ்வோடு தங்கம் வேல்டு பள்ளி மாணவ, மாணவியரின் திறன்களை வெளிப்படுத்தும் விதமாக, கல்வி கண்காட்சி நடக்க உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளி முதல்வர் மவுமிதா உள்பட பலர் உடனிருந்தனர்.