தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/144 நுாலகங்களுக்கு புத்தகங்கள் அனுப்ப ஏற்-பாடு

144 நுாலகங்களுக்கு புத்தகங்கள் அனுப்ப ஏற்-பாடு

144 நுாலகங்களுக்கு புத்தகங்கள் அனுப்ப ஏற்-பாடு


ADDED : அக் 23, 2026 05:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 23, 2026 05:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம் மாவட்டத்தில், மாவட்ட மைய நுாலகம், 16 முழு நேர நுாலகம், 49 கிளை நுாலகம், 78 ஊர்-புற நுாலகம் என, 144 நுாலகங்கள் உள்ளன. அவற்றுக்கு, 2026 நிதியாண்டுக்கு தேவையான புத்தகங்களை கொள்முதல் செய்ய, மாவட்ட மைய நுாலகத்துக்கு, 5 லட்சம் ரூபாய்; முழு நேர நுாலகத்துக்கு தலா, 2 லட்சம்; கிளை நுாலகத்-துக்கு தலா, 1.25 லட்சம்; ஊர்புற நுாலகத்துக்கு, தலா, 75,000 ரூபாய் வீதம் தனித்தனியே ஒதுக்கப்-பட்டன.

அதை பயன்படுத்தி, அந்தந்த நுாலக நிர்வாகம், நேரடியாக ஆன்லைனில், தேவையான புத்தகங்-களை கொள்முதல் செய்தன. அதன்படி, 506 பதிப்ப-கங்களில் இருந்து, 7,000க்கும் மேற்பட்ட தலைப்பு-களில் கொள்முதல் செய்த, 73,933 புத்தகங்கள், சேலத்தில் உள்ள மாவட்ட மைய நுாலகத்துக்கு ஒரு வாரத்துக்கு முன் கொண்டு வரப்பட்டன. அதன் மதிப்பு, ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என, நுாலக அலுவலர்கள் தெரிவித்-தனர். அந்த புத்தகங்கள், நுாலக வாரியாக பிரிக்கும் பணி நடந்து வருகிறது. ஒரு மாதத்-துக்குள், சம்பந்தப்பட்ட நுாலகங்களுக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது.'நிதி சேமிப்பு'

இதுகுறித்து தமிழ்நாடு நுாலகர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் தியாகராஜன் கூறியதா-வது:

இதற்கு முன் சென்னையில், 20 பேர் கமிட்டி, தமிழகம் முழுதும் புத்தகங்களை நேரடி கொள்-முதல் செய்தது. அதனால் ஒரே பதிப்பக புத்த-கங்கள் அதிக கொள்முதல் போன்ற பல்வேறு முறைகேடு, பண விரயம் நடந்தது. தற்போது அந்தந்த நுாலக நிர்வாகம், வாசகர்களின் கருத்து-களை கேட்டு, ஆன்லைனில் தேவையான புத்த-கங்களை கொள்முதல் செய்துள்ளது.

அதனால் மாவட்ட மைய நுாலகத்துக்கு ஒதுக்-கிய, 5 லட்சம் ரூபாயில், தேவையான புத்தகங்கள் அனைத்தும், 3.98 லட்சம் ரூபாயில் கொள்முதல் செய்ததால், 1.02 லட்சம் ரூபாய் மீதமுள்ளது. இதேபோல் அனைத்து நுாலக நிர்வாகமும் தேவைக்கு போக, நிதியை மிச்சப்படுத்தி சேமித்-துள்ளது. அதுவே கமிட்டி என்றால் ஒதுக்கிய நிதியை முழுமையாக செலவிட்டிருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us