/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஓடை ஆக்கிரமிப்பு அகற்ற ரூ.15,000 லஞ்சம் முதுநிலை வருவாய் ஆய்வாளர், இடைத்தரகர் கைது

ADDED : நவ 28, 2024 06:38 AM
வாழப்பாடி: ஓடை ஆக்கிரமிப்பு அகற்ற, 15,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, முதுநிலை வருவாய் ஆய்வாளர், இடைத்தரகரை, போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி, பெரியகவுண்டாபுரத்தை சேர்ந்த முருகேசன் மகன் யோகேஸ்வரன், 24.
இவரது விவசாய நிலம் அருகே, ஓடை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதற்கு நடவடிக்கை எடுக்கக்கோரி,
வாழப்பாடி தாசில்தார் அலுவலகத்தில், யோகேஸ்வரன் புகார் கொடுத்தார். அதற்கு, தாசில்தார்
அலுவல-கத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரியும் கார்த்தி, 44, என்பவர், 15,000 ரூபாய்
லஞ்சம் கேட்டார். இதுகுறித்து யோகேஸ்வரன், சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரி-வித்தார்.அவர்களது ஆலோசனைப்படி, நேற்று மதியம், 12:00 மணிக்கு, தாசில்தார் அலுவலகத்தில் யோகேஸ்வரன்,
15,000 ரூபாயை, இடைத்தரகர் முருகமணி, 53, என்பவரிடம் வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த, இன்ஸ்பெக்டர் முருகன் தலை-மையில் போலீசார், முருகமணியை பிடித்து
கைது செய்தனர். அவர் வாக்குமூலப்படி, கார்த்தியையும் கைது செய்தனர். தொடர்ந்து பணத்தை பறிமுதல்
செய்து விசாரிக்கின்றனர்.