/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கவுன்சிலர் இறுதி கூட்டத்தில் பிரியாணி வழங்கல்
/
கவுன்சிலர் இறுதி கூட்டத்தில் பிரியாணி வழங்கல்
ADDED : ஜன 03, 2025 04:00 AM
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில், தி.மு.க.,வில், 5, அ.தி.மு.க.,வில், 6, பா.ம.க., கம்யூ தலா, 1 என, 13 கவுன்சி-லர்கள் உள்ளனர். ஒன்றிய குழு தலைவராக, அ.தி.மு.க.,வின் ஜெகநாதன், துணைத்தலைவராக தி.மு.க.,வின் சங்கர் உள்ளனர். கடந்த செப்டம்பரில் நடந்த கூட்டத்தில், 1.70 கோடி ரூபாயில், 15 பணிகள் தேர்வு செய்து, தீர்மானம் நிறைவேற்றினர். நிதி இல்லை என, அதிகாரிகள் தெரிவிக்க, திட்டப்பணிகள் மேற்-கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது.இதனால் மாவட்ட நிர்வாகத்-திடம் கோரிக்கை விடுத்தனர். இம்மாதம், 5ல் பதவி காலம் முடியும் நிலையில் கடந்த டிசம்பரில் இறுதி கூட்டம் நடந்திருக்க வேண்டும். நிதியை எதிர்நோக்கி, கூட்டத்தை கவுன்சிலர்கள் ஒத்-திவைத்தனர். பின் மாவட்ட நிர்வாகம், 1.20 கோடி ரூபாய் ஒதுக்-கீடு செய்தது.
இதையடுத்து தலைவர் ஜெகநாதன் தலைமையில் கூட்டம் நேற்று நடந்தது. துணைத்தலைவர் சங்கர் முன்னிலை வகித்தார். கமிஷனர் கார்த்திகேயன், பொருள் குறித்து பேசினார். தொடர்ந்து, 5 ஆண்டுகளாக, ஒத்துழைப்பு கொடுத்த அரசு அதிகா-ரிகள், சக கவுன்சிலர்களுக்கு நன்றி தெரிவித்து, ஜெகநாதன், தி.மு.க., கவுன்சிலர் சுரேஷ்குமார், கம்யூ., கவுன்சிலர் மோகன் பேசினர். பின் சுரேஷ்குமார், கவுன்சிலர்களுக்கு இனிப்பு, நினைவு பரிசு வழங்கினார். கவுன்சிலர்கள், அலுவலக பணியா-ளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மட்டன் பிரியாணி, சிக்கன் கிரேவி, மீன், முட்டை உள்ளிட்ட அசைவ, சைவ விருந்துகள் பரிமாறப்பட்டன.
இ.பி.எஸ்.,க்கு நன்றி
கொங்கணாபுரம் ஒன்றிய கூட்டம் நேற்று நடந்தது. ஒன்றிய குழு தலைவர் மணி தலைமை வகித்தார். அதில், 5 ஆண்டு பதவியில் இருக்க வாய்ப்பளித்த அ.தி.மு.க., பொதுச்செயலர், இ.பி.எஸ்.,க்கு நன்றி; ஆதரவளித்த மக்களுக்கு நன்றி என்பன உள்பட, 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றியக்குழு துணை தலைவர் வைத்தியலிங்கம், வட்டார வளர்ச்சி அலுவ-லர்கள் கவுரி, பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
'மக்களுக்குரிய பணிகளை செய்யுங்கள்'
தாரமங்கலம் ஒன்றிய கவுன்சிலர் கூட்டம், பா.ம.க.,வை சேர்ந்த தலைவி சுமதி தலைமையில் நேற்று நடந்தது. அதில், 15 தீர்மா-னங்கள் நிறைவேற்றப்பட்டன. தி.மு.க.,வை சேர்ந்த, துணைத்த-லைவர் சீனிவாசன், பி.டி.ஓ., லட்சுமி உள்பட பலர் பங்கேற்-றனர். உள்ளாட்சி பதவிக்காலம், வரும், 5ல் நிறைவடைய உள்-ளதால், பிரிவு உபசார விழாவாக கொண்டாடினர். அதில் அனை-வரும், '5 ஆண்டுகளில், ஓட்டுப்போட்ட மக்களுக்கு, எங்களால் முடிந்த பணிகளை செய்து கொடுத்துள்ளோம். அதற்கு ஒத்து-ழைத்த அதிகாரிகளுக்கு நன்றி' என பலரும் தெரிவித்தனர்.
சிறப்பு விருந்தினராக, சேலம் மேற்கு தொகுதி, எம்.எல்.ஏ., அருள் பேசுகையில், ''ஒன்றிய குழுவுக்கு, பா.ம.க.,வின் சுமதி தலைவியாக இருந்தபோதும், கட்சி பாகுபாடின்றி அனைத்து கவுன்சிலர்களுக்கும் பணி ஒதுக்கி சிறப்பாக செயல்பட்டு உள்ளார். உள்ளாட்சி பதவி காலம் முடிவதால், தொடர்ந்து மக்க-ளுக்கு தேவையான பணிகளை, அதிகாரிகள் செய்து கொடுக்க வேண்டும்,'' என்றார். தொடர்ந்து அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி, அசைவ உணவு பரிமாறப்பட்-டது.