ADDED : ஜன 09, 2026 04:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி: பாரப்பட்டி ஊராட்சியில், சந்தியூர் செல்லும் சாலையோரம் ஏரா-ளமான வீடுகள் உள்ளன. அப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் கட்-டப்படவில்லை. உயரமான பகுதியில் வீடுகள் அமைந்துள்ள நிலையில், பள்ளமான இடத்தில் சேலம் - கரூர் ரயில் பாதை செல்கிறது.
வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் ஓடி, ரயில் பாதை உள்ள பகுதிக்கு செல்கிறது. வீடுகள் உள்ள சாலை-யோரத்தில் சேறு, சகதி உருவாகி சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது.
கழிவுநீரால் சாலையில் பாசி படர்ந்துள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி விழும் அபாயம் உள்ளது. அதனால் கால்வாய் கட்ட ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

