/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபருக்கு ஆயுள் சிறை
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபருக்கு ஆயுள் சிறை
ADDED : பிப் 05, 2025 07:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் மாவட்டம் இடைப்பாடி, புதுார் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம், 25. ஓட்டல் தொழிலாளியான இவர், 14 வயது சிறுமிக்கு, 2020 மே, 24ல் பாலியல் தொல்லை கொடுத்தார்.
சிறுமியின் பெற்றோர் புகார்படி, இடைப்பாடி போலீசார் வழக்கு பதிந்து, ஆறுமுகத்தை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அதில் ஆறுமுகத்துக்கு ஆயுள் தண்டனை, 3,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி ஜெயந்தி, நேற்று உத்தரவிட்டார்.