/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நிழற்கூடம், சாலை பணி; எம்.எல்.ஏ., துவக்கிவைப்பு
/
நிழற்கூடம், சாலை பணி; எம்.எல்.ஏ., துவக்கிவைப்பு
ADDED : பிப் 19, 2025 07:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: மேட்டூர் சட்டசபை தொகுதி மேம்பாட்டு திட்டத்தில், கொளத்துார் டவுன் பஞ்சாயத்து சின்னமேட்டூரில், 17.50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட போர்வெல், மேல்நிலை நீர் தேக்க தொட்டியை, மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம் நேற்று, மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
தொடர்ந்து, கீழ்தண்டா, 4 ரோடு மற்றும் காவேரிபுரம் ஊராட்சி கோவிந்தபாடியில் தலா, 8 லட்சம் ரூபாய் செலவில் நிழற்கூடம் கட்டும் பணிகள், லக்கம்பட்டி ஊராட்சி நீதிபுரம், பெரியதண்டாவில், 11 லட்சம் ரூபாயில் கான்கீரிட் சாலை அமைக்கும் பணிகளை, எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்.

