/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'சங்ககிரி டவுன் பஞ்சாயத்து நகராட்சியாக அறிவிக்கப்படும்'
/
'சங்ககிரி டவுன் பஞ்சாயத்து நகராட்சியாக அறிவிக்கப்படும்'
'சங்ககிரி டவுன் பஞ்சாயத்து நகராட்சியாக அறிவிக்கப்படும்'
'சங்ககிரி டவுன் பஞ்சாயத்து நகராட்சியாக அறிவிக்கப்படும்'
ADDED : செப் 13, 2024 07:12 AM
சங்ககிரி: தி.மு.க.,வின் சேலம் மேற்கு மாவட்ட பொது உறுப்பினர் கூட்டம் சங்ககிரியில் நேற்று நடந்தது. சேலம் எம்.பி., செல்வகணபதி வரவேற்றார்.
அதில் அமைச்சர் நேரு தலைமை வகித்து பேசியதாவது: அனைவரும் இணைந்து கட்சி பணியாற்றி 2026 சட்டசபை தேர்தலில் சேலம் மாவட்டம் உள்பட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று, கட்சி தலைவர் ஸ்டாலினை மீண்டும் முதல்வராக்க பாடுபட வேண்டும். தி.மு.க., சார்பில் வரும், 17ல் நடக்க உள்ள கட்சி பவளவிழாவில் அனைவரும் பங்கேற்க வேண்டும். இதுகுறித்த சுவர் விளம்பரங்களை அனைத்து பகுதிகளிலும் செய்ய வேண்டும். சங்ககிரி டவுன் பஞ்சாயத்து விரைவில் நகராட்சியாக அறிவிக்கப்படும். சங்ககிரியில் உழவர் சந்தை அமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம், எம்.எல்.ஏ., ராஜேந்திரன், சேலம் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் தங்கமுத்து, மாவட்ட துணை செயலர்கள் சுந்தரம், சம்பத்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.