/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பெண் மீது உரசிய கார் கண்ணாடி உடைப்பு
/
பெண் மீது உரசிய கார் கண்ணாடி உடைப்பு
ADDED : மார் 18, 2024 04:05 AM
கொளத்துார்: தாரமங்கலத்தை சேர்ந்த சக்திவேல் உள்பட, 6 பேர், நேற்று மதியம், 3:00 மணிக்கு கர்நாடகா மாநிலம் மாதேஸ்வரன் மலைக்கு, 'டாடா சுமோ கிராண்டி' காரில் சென்றனர்.
மாலை, கொளத்துார் அடுத்த கருங்கல்லுாரில் சென்றபோது அப்பகுதியை சேர்ந்த சீரங்காயி, 45, என்பவர் மீது கார் உரசியது. காயம் அடைந்த சீரங்காயி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் காரை சக்திவேல் நிறுத்தாமல் சென்றார்.
இதனால் காரில் இருந்த குழந்தைகள் கூச்சலிட்டன. சத்தம் கேட்டு குழந்தைகளை கடத்தி செல்வதாக அப்பகுதியை சேர்ந்த சிலர் நினைத்தனர். தொடர்ந்து காரின் முன், பின் புற கண்ணாடிகளை கல்வீசி சேதப்படுத்தினர். கொளத்துார் போலீசார், கார் கண்ணாடியை சேதப்படுத்தியவர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.

