/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஐயப்ப சீசன் எதிரொலி ஆடுகள் விற்பனை மந்தம்
/
ஐயப்ப சீசன் எதிரொலி ஆடுகள் விற்பனை மந்தம்
ADDED : டிச 08, 2024 04:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி: சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஆட்டுச்சந்தைக்கு நேற்று, 2,700 ஆடுகளை, விவசாயிகள், வியாபாரிகள், விற்பனைக்கு கொண்டு வந்தனர். கடந்த வாரத்தை விட, ஆடுகள் விற்பனை சற்று மந்தமாக இருந்தது. விலையும், 100 முதல், 200 வரை குறைந்து, 10 கிலோ ஆடு, 6,550 முதல், 7,100 ரூபாய் வரை விலைபோனது. இதன்மூலம், 1.80 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது.
இதுகுறித்து சேலம் மாவட்ட ஆடு வியாபாரிகள் சங்கத்தலைவர் பார்த்தசாரதி கூறுகையில், ''ஐயப்ப சீசனால், சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைந்தது. விலையும் சற்று குறைந்தது,'' என்றார்.