/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மூன்று சிறந்த அரசு பள்ளிகளுக்கு கேடயம்
/
மூன்று சிறந்த அரசு பள்ளிகளுக்கு கேடயம்
ADDED : நவ 12, 2024 07:05 AM
சேலம்: சேலம் மாவட்டத்தில், மூன்று சிறந்த அரசு பள்ளிகளுக்கு கேடயம் வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் தொடக்க கல்வித்துறை சார்பில், சிறப்பாக செயல்-படும் அரசு, ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, கேடயங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி சேலம் மாவட்டத்தில், 2023-24ம் ஆண்டுக்கான விருது பெறும் மூன்று சிறந்த பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
கெங்கவல்லி ஒன்-றியம், உலிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மேச்சேரி ஒன்றியம் விருதாசம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் இடைப்பாடி ஒன்றியம் ஆனைப்பள்ளம் ஊராட்சி ஒன்-றிய தொடக்கப்பள்ளி ஆகியவை, தேர்வு குழு அலுவலர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த பள்ளிகளுக்கான கேடயம், சென்னையில் நடைபெறும் விழாவில் நாளை வழங்கப்படவுள்-ளது.