/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கொடியேற்றத்துடன் சிவராத்திரி விழா தொடக்கம்
/
கொடியேற்றத்துடன் சிவராத்திரி விழா தொடக்கம்
ADDED : மார் 08, 2024 03:01 AM
வீரபாண்டி;மகா சிவராத்திரியையொட்டி, வீரபாண்டி, அங்காளம்மன் கோவிலில், 5 நாட்கள் திருவிழா நேற்று காலை கணபதி யாகத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கொடி மரத்துக்கு அபி ேஷகம் செய்து, மஞ்சள், குங்குமம், சந்தனம், பல வண்ண மலர் மாலைகளால் அலங்கரித்து காலை, 9:00 மணிக்கு திரிசூல கொடி ஏற்றி முறைப்படி திருவிழா தொடங்கியது. மாலையில், 'மாசி மகத்துவம்' குறித்து ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.
பிரதோஷத்தை முன்னிட்டு இன்று மாலை, நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபி ேஷகம் செய்து பூஜை நடக்கிறது. இரவு முழுதும் சிவ சகஸ்ர நாம அர்ச்சனை, திருவாசகம் முற்றோதல், பக்தர்களால் பாராயணம் செய்யப்படுகிறது. நாளை அதிகாலை, 4:00 மணிக்கு சக்தி அழைத்தல், தொடர்ந்து பஞ்சமுக கப்பரை எடுத்தல், உடைத்தல் பலகார படையல் பூஜை நடக்க உள்ளது. மதியம் சக்தி கரக ஊர்வலம், ஊஞ்சல் உற்சவம் நடக்கும்.
வரும், 10 காலையில் பிள்ளைப்பாவு எடுக்கும் ஊர்வலம், இரவு மயான கொள்ளை, தக்கனுக்கு உயிர் கொடுத்தல்; 11ல் கொடி இறக்கம், மஞ்சள் நீராட்டு உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறும்.
இன்று விடிய விடிய அபிேஷகம்
சேலம், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் பிரதோஷமான இன்று மாலை, கரபுரநாதர், பெரியநாயகி அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருள செய்து பூஜை நடக்கிறது. தொடர்ந்து சிவராத்திரியையொட்டி இரவு, 8:00 மணிக்கு முதல் கால பூஜை, 10:30 மணிக்கு, 2ம் கால பூஜை, நள்ளிரவு, 12:00 மணிக்கு, 3ம் கால பூஜை, அதிகாலை, 4:30 மணிக்கு, 4ம் கால பூஜை என விடிய விடிய கரபுரநாதருக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகை மங்கல பொருட்களால் சிறப்பு அபிேஷகம் நடக்கிறது. நாளை காலை சர்வ அலங்காரத்தில் கரபுரநாதருக்கு மகா தீபாராதானையுடன் சிறப்பு பூஜை நடக்கும். மேலும் அன்னதானம் வழங்கப்
படவுள்ளது.

