/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குண்டு வெல்லம் விலை உச்சம் தொட்டதால் அதிர்ச்சி
/
குண்டு வெல்லம் விலை உச்சம் தொட்டதால் அதிர்ச்சி
ADDED : ஏப் 18, 2025 01:36 AM
சேலம்:சேலம் வெல்லம் மார்க்கெட்டிற்கு, தின்னப்பட்டி, தீவட்டிப்பட்டி, காமலாபுரம், ஓமலுார், மேச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் குண்டு வெல்லம், அச்சு வெல்லம் விற்பனைக்கு வரும்.
நேற்று மார்க்கெட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு, வெல்லம் விலை உச்சம் தொட்டது. 30 கிலோ கொண்ட சிப்பம், 1,550 ரூபாய்க்கு விலை போனது. ஏப்ரல் துவக்கத்தில், 1,300 ரூபாயாக இருந்த விலை, கடந்த வாரம், 1,400 ஆக அதிகரித்தது.
தினமும் அதிகரித்துக் கொண்டே வந்த நிலையில், ஒரே வாரத்தில், 150 ரூபாய் அதிகரித்து, 1,550 ரூபாயாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து, 1,400க்கு விற்பனை செய்யப்பட்ட அச்சு வெல்லமும், 1,550 ரூபாயாக உயர்ந்தது. 1,380 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நாட்டு சர்க்கரை நேற்று, 1,480 ரூபாயாக உயர்ந்தது.
வியாபாரிகள் கூறுகையில், 'கரும்பு விளைச்சல் குறைவுதான் இதற்குக் காரணம். சில்லரை விற்பனையில் குண்டு வெல்லம் கிலோ, 60 முதல், 65 வரை விலை உயர வாய்ப்புள்ளது' என்றனர்.

