ADDED : செப் 03, 2025 02:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் சேலம், கோரிமேடு, திருவேணி கார்டனை சேர்ந்தவர் தமிழ்செல்வன், 34. சேலம் மத்திய சிறை எதிரே பழக்கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, கடையை சாத்திவிட்டு, வீட்டுக்கு சென்றார்.
நேற்று காலை, கடைக்கு வந்தபோது, கடையின் ஒரு பக்க ஷட்டர் துாக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, கல்லா பெட்டியில் இருந்த, 1,000 ரூபாய், 'பட்டன்' மொபைல் போன் திருடுபோனது தெரிந்தது. இதுகுறித்து தமிழ்செல்வன் புகார்படி, அஸ்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.