/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலத்தில் மே 5 வணிகர் தினத்தில்வழக்கம் போல் கடைகள் திறப்பு
/
சேலத்தில் மே 5 வணிகர் தினத்தில்வழக்கம் போல் கடைகள் திறப்பு
சேலத்தில் மே 5 வணிகர் தினத்தில்வழக்கம் போல் கடைகள் திறப்பு
சேலத்தில் மே 5 வணிகர் தினத்தில்வழக்கம் போல் கடைகள் திறப்பு
ADDED : மே 06, 2025 01:40 AM
சேலம்:தமிழகத்தில் ஆண்டுதோறும் மே, 5ல் வணிகர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு வணிகர் தினத்தை முன்னிட்டு, வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் வணிகர் தினம், வணிகர் விடுதலை முழக்க மாநாடு, முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் மாநாடு செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. வணிகர்கள் கடைகளை அடைத்து, மாநாட்டில் பங்கேற்பர் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று வணிகர்கள் மாநாட்டில் பங்கேற்காமல் புறக்கணித்து, சேலத்தில் கடைகளை திறந்து விற்பனையை மேற்கொண்டனர்.
இது குறித்து, சேலம் மாவட்ட மளிகை வியாபாரிகள் சங்க பொருளாளர், செவ்வாய்பேட்டை பால் மார்க்கெட் மளிகை வர்த்தகர் சங்கத் தலைவர் செல்வகுமார் கூறுகையில்,'' வணிகர்கள் மாநாடு என்பது வியாபாரிகள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைப்பதற்காக மட்டுமே நடத்தப்படும். ஆனால், தற்போது நடத்தப்படும் மாநாடு ஒரு பாராட்டு மாநாடு போல உள்ளது. இதற்கு எங்களுக்கு விருப்பம் இல்லை; மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை, கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்கிறோம். பேரமைப்பில் உள்ள செவ்வாய்பேட்டை, பால் மார்க்கெட் மளிகை வர்த்தகர் சங்கம், செவ்வாய் பேட்டை தாவர எண்ணெய் வியாபாரிகள் சங்கம், கருங்கல்பட்டி வியாபாரிகள் சங்கங்களில் உள்ள, 400க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் மாநாட்டை புறக்கணித்து, கடைகளை திறந்து வியாபாரம் செய்கின்றனர்,'' என்றார்.
சேலம் செவ்வாய்பேட்டை மளிகை அண்ட் ஷராப் வர்த்தக நலச்சங்க தலைவர் நட்ராஜ் கூறுகையில்,'' எங்கள் சங்க உறுப்பினர்கள் செவ்வாய்பேட்டை முழுவதும் உள்ளனர். அரிசி கடை, பருப்பு கடை உள்ளிட்ட அனைத்து வர்த்தக நிறுவனங்களும் திறந்துள்ளன,'' என்றார்.