/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
10க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கடைகளை பதிவு செய்ய அழைப்பு
/
10க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கடைகளை பதிவு செய்ய அழைப்பு
10க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கடைகளை பதிவு செய்ய அழைப்பு
10க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கடைகளை பதிவு செய்ய அழைப்பு
ADDED : செப் 19, 2024 07:55 AM
சேலம்: புது சட்ட திருத்தப்படி, 10க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அடங்கிய கடைகள், இணையதளத்தில் பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
இதுகுறித்து சேலம் தொழிலாளர் உதவி கமிஷனர் திருநந்தன்(அமலாக்கம்) அறிக்கை:தமிழ்நாடு கடைகள், நிறுவனங்கள் சட்டத்தில் கடைகள், நிறுவனங்களை பதிவு செய்தவதற்கான சட்ட திருத்தம், 2024 ஜூலை, 2 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில், 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களை
அமர்த்தியுள்ள, புதிதாக தொடங்கப்பட்ட கடைகள், நிறுவன உரிமையாளர்கள், http://labour.tn.gov.in என்ற இணைய முகவரியில், 100 ரூபாய் செலுத்தி, 6 மாதத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பம் பெறப்பட்ட, 24 மணி நேரத்துக்குள் சம்பந்தப்பட்ட ஆய்வாளரால் பதிவு சான்றிதழ் வழங்கப்படும். 24 மணி நேரத்துக்குள் வழங்காவிட்டால் பதிவு தானாக அங்கீகரிக்கப்பட்டதாக கருதப்படும். தற்போது
இயங்கி கொண்டிருக்கும் கடைகள், நிறுவனங்கள், பதிவு கட்டணம் ஏதுமின்றி இணைய முகவரியில் ஓராண்டுக்குள் விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும். பதிவு சான்றிதழில் திருத்தங்கள் மேற்கொள்ளவும், இணைய
முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

