ADDED : ஆக 02, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழப்பாடி, வாழப்பாடி வட்டார அளவில் பள்ளி மாணவ, மாணவியருக்கு சிலம்ப போட்டி, புழுதிக்குட்டை ஊராட்சி வெள்ளிக்கவுண்டனுார் அரசு உறைவிட மேல்நிலைப்பள்ளி யில் நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் ராஜா தொடங்கி வைத்தார். வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம் ஒன்றியங்களில், அரசு, தனியார் பள்ளியின், 14, 17, 19 வயதுக்குட்பட்ட மாணவ- மாணவியர், 200க்கும் மேற்பட்டோர், ஒற்றை,
இரட்டை கம்பு வீச்சுகள், தனித்திறன் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தினர். தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவ- மாணவியருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. அருநுாற்றுமலை உறைவிட மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை சாந்தி எஸ்தர் ராணி உள்பட பலர் பங்கேற்றனர்.

