/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'பட்டு' மூலப்பொருட்கள் விலை 40 சதம் வரை அதிகரிப்பு உற்பத்தியாகும் வேட்டி விற்பனையில் பாதிப்பு
/
'பட்டு' மூலப்பொருட்கள் விலை 40 சதம் வரை அதிகரிப்பு உற்பத்தியாகும் வேட்டி விற்பனையில் பாதிப்பு
'பட்டு' மூலப்பொருட்கள் விலை 40 சதம் வரை அதிகரிப்பு உற்பத்தியாகும் வேட்டி விற்பனையில் பாதிப்பு
'பட்டு' மூலப்பொருட்கள் விலை 40 சதம் வரை அதிகரிப்பு உற்பத்தியாகும் வேட்டி விற்பனையில் பாதிப்பு
ADDED : ஜன 04, 2025 07:18 AM
சேலம்: பொங்கலை முன்னிட்டு பட்டு வேட்டி உற்பத்தி அதிகரிக்கப்-பட்டுள்ள நிலையில், அதன் மூலப்பொருட்கள் விலை, 40 சத-வீதம் வரை உயர்ந்துள்ளது. உற்பத்தி செய்யப்படும் பட்டு ரகங்கள் விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் அம்மாபேட்டை, சிங்கமெத்தை, பச்சப்-பட்டி, வலசையூர், ஆட்டையாம்பட்டி, மல்லுார், இளம்பிள்ளை, தாரமங்கலம் உள்பட பல்வேறு இடங்களில் வெண்பட்டு வேட்டி, பட்டு துண்டு, சட்டை துணி ஆகியவை கைத்தறி, விசைத்தறியில் உற்பத்தி செய்யப்படுகின்றன. கைத்தறியில் உற்-பத்தியாகும் பட்டு வேட்டிக்கு மக்களிடம் வரவேற்பு உள்ளது. அவை தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் விற்கப்படுகின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தற்போது பட்டு வேட்டி உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.
சேலம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் தேவராஜன் கூறியதாவது:பொங்கல் பண்டிகை வரும், 14ல் கொண்டாடப்பட உள்ளது. தொடர்ந்து திருமண முகூர்த்த நாட்கள் வருகின்றன. இதனால் பட்டு வேட்டி உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் பட்டுக்-கூட்டில் இருந்து கிடைக்கப்பெறும் பாவு, கடந்த மாதம், கிலோ, 4,000 ரூபாயில் இருந்து உயர்ந்து தற்போது, 5,500 ரூபாயாக உள்-ளது.அதேபோல் கோரா பட்டு கிலோ, 3,300க்கு விற்றது, 4,500 முதல், 4,800; ஒரிஜினல் ஜரிகை கிராம், 80 முதல், 85க்கு விற்-றது, 90 முதல், 95; காப்பர் ஜரிகை மார்க்(240 கிராம்) 650க்கு விற்றது, 700 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. தங்கத்துக்கு ஏற்ப, ஜரிகை விலை உயர்ந்து வருகிறது. கடந்த, 2 ஆண்டுகளாக, 3 மடங்குக்கு மேல் விலை உயர்ந்துள்ளது.ஜரிகை பியூர் பட்டு வேட்டி, 3,500 முதல், 20,000; காப்பர் பியூர் பட்டு வேட்டி, 2,500 முதல், 9,000; பட்டு சட்டை ஒரு மீட்டர், 1,000 முதல், 1,050; பியூர் ஜரிகை பட்டு துண்டு, 2,000 முதல், 5,000, காப்பர் பியூர் பட்டு, 1,600 முதல், 3,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு மாதத்தில், 30 முதல், 40 சதவீதம் வரை, மூலப்பொருட்கள் விலை படிப்படி-யாக உயர்ந்துள்ளதால், சில மாதங்களாக விற்பனை பாதிக்கப்பட்-டுள்ளது.இருப்பினும் பண்டிகை, முகூர்த்த நாளை முன்னிட்டு விற்-பனை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில், 30 முதல், 40 சதவீதத்-துக்கு மேல் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தொழில் வளர்ச்சிக்கு மூலப்பொருட்கள் விலையை குறைக்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.