/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரயிலில் ஐ.டி., ஊழியரிடம் சில்மிஷம் சித்துார் ஜவுளி கடை உரிமையாளர் கைது

ADDED : அக் 09, 2025 01:36 AM
சேலம், ஓடும் ரயிலில், ஐ.டி., பெண் ஊழியரிடம் சில்மிஷம் செய்த, ஜவுளி உரிமையாளரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூருவில் உள்ள தனியார் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரியும், 24 வயது பெண், அவரது சொந்த ஊரான ஈரோடு செல்ல, நேற்று முன்தினம் இரவு, குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணித்தார். தர்மபுரியை கடந்து, ரயில் வந்துகொண்டிருந்தபோது, அப்பெண்ணிடம், ஒருவர் சில்மிஷம் செய்துள்ளார். அப்பெண் உடனே கூச்சலிட, சக பயணியர், அந்த நபரை பிடித்து, சேலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ரயில் சேலத்துக்கு, நேற்று காலை, 4:00 மணிக்கு வந்தபோது, ரயில்வே போலீசார், ரயிலில் ஏறி, பெண்ணிடம் சில்மிஷம் செய்தவரை பிடித்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். அதில் ஆந்திரா மாநிலம், சித்துாரை சேர்நத, ஜவுளி கடை உரிமையாளர் சங்கர், 45, என்பதும், வியாபாரம் தொடர்பாக ஈரோட்டுக்கு செல்லும்போது, இச்செயலில் ஈடுபட்டதும் தெரிந்தது.