/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
திருடிய லாரியை ஓட்டியபோது விபத்து டிரைவரை போலீசில் ஒப்படைத்த மக்கள்
/
திருடிய லாரியை ஓட்டியபோது விபத்து டிரைவரை போலீசில் ஒப்படைத்த மக்கள்
திருடிய லாரியை ஓட்டியபோது விபத்து டிரைவரை போலீசில் ஒப்படைத்த மக்கள்
திருடிய லாரியை ஓட்டியபோது விபத்து டிரைவரை போலீசில் ஒப்படைத்த மக்கள்
ADDED : அக் 09, 2025 01:33 AM
சேலம்,: சேலம், குகையை சேர்ந்தவர் கவுதம்குமார், 47. தனியார் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில், ஒப்பந்த அடிப்படையில், சொந்த லாரியை ஓட்டி வருகிறார். நேற்று பார்சல் ஏற்றிக்கொண்டு, சீலநாயக்கன்பட்டியில் இருந்து குரங்குச்சாவடி வந்து பொருட்களை இறக்கினார். தொடர்ந்து வெண்ணங்கொடி முனியப்பன் கோவில் அருகே, சாவியுடன் லாரியை நிறுத்திவிட்டு டீ குடிக்க சென்றார்.
அப்போது ஒருவர், லாரியில் ஏறி வாகனத்தை, வேகமாக ஓட்டிச்சென்றார். கவுதம்குமார் பார்த்து, அந்த வழியே சென்ற ஒருவரது பைக்கில் ஏறி, லாரியை பின்தொடர்ந்தார். லாரி அதிவேகமாக சென்ற நிலையில், சேலம், சுந்தர்லாட்ஜ் அருகே, முன்புறம் சென்ற ஆட்டோவில் மோதி, அருகே உள்ள ரோட்டரி சங்க மதில் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
லாரி, ஆட்டோவின் முன்பகுதி சேதமான நிலையில், மக்கள் லாரியை ஓட்டி வந்த வாலிபரை பிடித்தனர். தொடர்ந்து அஸ்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்ததும், அந்த வாலிபரை, மக்கள் ஒப்படைத்தனர். அவரை, ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்று போலீசார் விசாரித்தனர். அதில் தர்மபுரி மாவட்டம் அரூர், பெரியபட்டியை சேர்ந்த, லாரி டிரைவர் கார்த்தி, 35, என தெரிந்தது. அதேநேரம் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்று பேசுவதால், போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.