/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கள்ள துப்பாக்கி வைத்திருப்போர் வரும் 30க்குள் ஒப்படைக்க உத்தரவு
/
கள்ள துப்பாக்கி வைத்திருப்போர் வரும் 30க்குள் ஒப்படைக்க உத்தரவு
கள்ள துப்பாக்கி வைத்திருப்போர் வரும் 30க்குள் ஒப்படைக்க உத்தரவு
கள்ள துப்பாக்கி வைத்திருப்போர் வரும் 30க்குள் ஒப்படைக்க உத்தரவு
ADDED : அக் 09, 2025 01:33 AM
சேலம், சேலம் மாவட்ட வன அலுவலர் காஷ்யப் ஷஷாங்க் ரவி அறிக்கை:
சேலம் வன கோட்டத்தில் உள்ள வன உயிரினங்கள், யானைகளை, கள்ளத்துப்பாக்கிகள் மூலம் வேட்டையாடுவதை தடுக்க, வனம் சார்ந்த கிராமங்களில் வசிக்கும் மக்கள் யாரும், கள்ள துப்பாக்கிகள் வைத்திருந்தால், வரும், 30க்குள், வன அலுவலர், போலீஸ் துறை அலுவலர் அல்லது ஊர் முக்கிய பிரமுகர்களிடம் தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும். கள்ளத்துப்பாக்கி ஒப்படைப்போர் மீது வனக்குற்ற வழக்கு பதிவு செய்யப்படாது.
துண்டு பிரசுரம் வினியோகித்தல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகள் மூலம், கள்ள துப்பாக்கிகளை ஒப்படைக்க, வனப்பணியாளர்கள் தொடர்ந்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். கள்ள துப்பாக்கிகள் வைத்திருப்பது, ஒப்படைப்பது தொடர்பான தகவல்களை, மக்கள், சேர்வராயன் தெற்கு வனச்சரகத்துக்கு, 95979 - 99751 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
அதேபோல் சேர்வராயன் வடக்கு வன சரகம், 99433 - 55449; ஏற்காடு, 94427 - 78092; மேட்டூர், 94425 - 27150; டேனிஷ்பேட்டை வனச்சரகத்துக்கு, 94428 - 04001; வாழப்பாடி வனச்சரகத்துக்கு, 91598-91477 என்ற எண்ணில் உள்ள வனச்சரக அலுவலர்களிடம் தெரிவிக்கலாம்.