/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சப்பாத்தி மாவு கடைக்காரரை தாக்கிய தி.மு.க., கவுன்சிலரின் கணவர் கைது

ADDED : அக் 09, 2025 01:32 AM
சேலம், சேலம், குகை, லைன்ரோட்டை சேர்ந்தவர் குமார், 62. வீட்டின் முன்புறம் சப்பாத்தி மாவு கடை வைத்துள்ளார். நேற்று காலை, மாநகராட்சி குப்பை வண்டி வந்தது. குமார், அவரது வீடு, கடையின் குப்பையை கொட்ட எடுத்துச்சென்றார். அப்போது தொலைவில் மற்றொரு குப்பை வாகனம் நின்று கொண்டிருந்தது.
இந்நிலையில், சேலம் மாநகராட்சியின், 48வது வார்டு, தி.மு.க., கவுன்சிலர் விஜயாவின் கணவர் ராமலிங்கம், குமாரை பார்த்து, தொலைவில் உள்ள வண்டியில் குப்பையை கொட்ட சொன்னார். அதில் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து குமார், அருகே இருந்த வண்டியில் குப்பையை கொட்டினார். இதில் ஆத்திரம் அடைந்த ராமலிங்கம், தகாத வார்த்தையில் பேசியதோடு, குமாரை தாக்கினார்.
குமாரின் உறவினர்கள் தடுக்க முயன்றனர். இதனால் ராமலிங்கம், போன் செய்து, இருவரை வரவழைத்தார். அவர்களும் சேர்ந்து தகாத வார்த்தையில் திட்டி, குமார், உறவினர்களை தாக்கினர். காயம் அடைந்த குமார், செவ்வாய்ப்பேட்டை போலீசில் கொடுத்த புகார்படி, ராமலிங்கம், குகை, ஆண்டிப்பட்டி ஏரி ஹவுசிங் போர்டை சேர்ந்த பிரபாகரன், 34, ராமலிங்கம் கோவில் தெரு கார்த்தி, 24, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.