/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து தரைமட்டம்
/
ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து தரைமட்டம்
ADDED : அக் 09, 2025 01:32 AM
வாழப்பாடி, வாழப்பாடி டவுன் பஞ்சாயத்தில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் முதல் ஆத்துமேடு பாலம் வரை, தம்மம்பட்டி நெடுஞ்சாலை இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, 120 கடைக்காரர்களுக்கு, வாழப்பாடி உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், இரு வாரங்களுக்கு முன், நோட்டீஸ் வழங்கினர். இரு நாட்களாக, சில கடைக்காரர்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொண்டனர்.
இந்நிலையில் நேற்று மீதி ஆக்கிரமிப்புகளை, பொக்லைன் மூலம், நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள், வருவாய்த்துறையினர் உதவியுடன் அகற்றினர். வாழப்பாடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 3 வீடுகள், 100க்கும் மேற்பட்ட கடைகளின் மேற்கூரைகள் என, ஆக்கிரமிப்புகள் முழுதும் அகற்றப்பட்டன.