/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏரியில் மண் கடத்தல்; மக்கள் சாலை மறியல்
/
ஏரியில் மண் கடத்தல்; மக்கள் சாலை மறியல்
ADDED : ஆக 29, 2024 07:48 AM
இடைப்பாடி : இடைப்பாடி, வேம்பனேரி ஏரியில் வண்டல் மண் எடுக்க, விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் விவசாயிகள் போர்வையில், மண் கடத்தப்படுவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள், நேற்று வேம்பனேரியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். காலை, 8:00 முதல், 10:00 மணி வரை அரசு பஸ்கள், தனியார் பள்ளி பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள், 2 மணி நேரமாக செல்ல முடியாமல் அணிவகுத்தன.
இதையறிந்து அங்கு வந்த இடைப்பாடி தாசில்தார் வைத்தியலிங்கம், இடைப்பாடி போலீசார், மக்களிடம் பேச்சு நடத்தினர். அப்போது வேம்பனேரியில் மண் எடுக்க அனுமதிக்க மாட்டோம் என தாசில்தார் உறுதியளிக்க, மக்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து போக்குவரத்து சீரானது.

