ADDED : டிச 12, 2024 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெள்ளி தட்டு திருட்டு
சேலம், டிச. 12-
ஓமலுார் அடுத்த, கொல்லப்பட்டி புதுார் தட்டான்சாவடியை சேர்ந்த ராஜ்குமார் மனைவி சிவகாமி, 47. இவரது மகனின் நிச்சயதார்த்தம், கடந்த, 5ல் பெரியார் பல்கலை எதிரே உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. அப்போது, 60,000 ரூபாய் மதிப்பிலான வெள்ளி தட்டு திருடுபோனதாக, சிவகாமி நேற்று முன்தினம் அளித்த புகார்படி, கருப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

