/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஒரே வாரத்தில் வெள்ளி ரூ.27,000 உயர்வு
/
ஒரே வாரத்தில் வெள்ளி ரூ.27,000 உயர்வு
ADDED : டிச 04, 2025 01:42 AM

சேலம்: சர்வதேச மார்க்கெட் நிலவரப்படி, தங்கம், வெள்ளி விலை ஏற்ற, இறக்கமாக காணப்படும். ஏற்கனவே, தங்கம் விலை ஒருபுறம் அதிகரித்து வரும் நிலையில், தற்போது அதற்கு போட்டியாக, வெள்ளி விலையும் உயர்ந்து வருகிறது.
சேலத்தில் நவ., 26ல் வெள்ளி, கிராம் 171 ரூபாய், கிலோ 1.71 லட்சம் ரூபாயாக இருந்தது.
தொடர்ந்து, 28ல் கிராம் 178, கிலோ 1.78 லட்சம்; 29ல் கிராம் 187; கிலோ 1.87 லட்சம்; நேற்று முன்தினம் கிராம் 191, கிலோ 1.91 லட்சம் ரூபாய் என, படிப்படியாக உயர்ந்தது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில், வெள்ளி கிராமுக்கு 7 ரூபாய் உயர்ந்தது.
அதன்படி, கிராம் வெள்ளி 198 ரூபாயாகவும், கிலோ வெள்ளி 1,98,000 ரூபாயாகவும் உயர்ந்தது. இதன்மூலம் கடந்த ஒரு வாரத்தில் வெள்ளி விலை கிலோவுக்கு, 27,000 ரூபாய் உயர்ந்துள்ளது.

