/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் டிரைவருக்கு 20 ஆண்டு சிறை
/
சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் டிரைவருக்கு 20 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் டிரைவருக்கு 20 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் டிரைவருக்கு 20 ஆண்டு சிறை
ADDED : டிச 04, 2025 01:22 AM
சேலம்: சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த கார் டிரைவருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சேலம், செட்டிச்சாவடி, அண்ணா நகரை சேர்ந்த, 13 வயது சிறுமி, 2022 ஆக., 9ல் மாயமானார். உறவினர் தம்பதியான, 'ஆக்டிங்' கார் டிரைவர் பிரகாஷ்ராஜ், 28, அவரது மனைவி திவ்யா அளித்த புகார்படி, அம்மாபேட்டை மகளிர் போலீசார் தேடியும், சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் திவ்யா, இரவில் முகத்தை மறைத்தபடி, வீடு அருகே உள்ள அறைக்கு அடிக்கடி சென்று வருவதை போலீசார் நோட்டமிட்டனர். அந்த அறைக்குள் சென்று பார்த்த போது, சிறுமி அடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
சிறுமியை மீட்டு, போலீசார் விசாரித்ததில், திருமணம் செய்து கொள்வதாக கூறி கடத்தி வந்து அடைத்து வைத்து, பிரகாஷ்ராஜ், பாலியல் துன்புறுத்தல் செய்தது தெரிந்தது.
சிறுமியின் வாக்குமூலம் படி, அந்த தம்பதி கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு, சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. அதில், பிரகாஷ்ராஜுக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி தீபா நேற்று தீர்ப்பளித்தார். திவ்யா விடுவிக்கப்பட்டார்.

