/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வீ.ஜீ.விகாஸ் பப்ளிக் பள்ளியில் விளையாட்டு தின விழா
/
வீ.ஜீ.விகாஸ் பப்ளிக் பள்ளியில் விளையாட்டு தின விழா
வீ.ஜீ.விகாஸ் பப்ளிக் பள்ளியில் விளையாட்டு தின விழா
வீ.ஜீ.விகாஸ் பப்ளிக் பள்ளியில் விளையாட்டு தின விழா
ADDED : டிச 03, 2025 07:57 AM
பனமரத்துப்பட்டி, மல்லுார் வீ.ஜீ.விகாஸ் பப்ளிக் பள்ளியில் விளையாட்டு தின விழா கடந்த, 29ல் கொண்டாடப்பட்டது. அங்குள்ள மாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்த பின், விளையாட்டு துறையில் சாதனை புரிந்த, 11 மாணவர்கள், ஒலிம்பிக் சுடரை ஏந்தியபடி பள்ளிக்கு வந்தனர்.
சேலம் ரயில்வே மண்டல அலுவலகத்தில் பணிபுரியும், இந்திய கூடைப்பந்து அணியின் முன்னாள் கேப்டன் ராஜபிரியதர்ஷினி, பள்ளி நிர்வாகிகள், சமாதானப்புறாக்களை பறக்க விட்டனர். பள்ளி இசை குழுவினரின் இசையோடு, மாணவர்களின் அணிவகுப்பு நடந்தது.
பள்ளி முதன்மை செயல் அலுவலர் திருநாவுக்கரசு பேசினார். முதல்வர் விஜயகுமார் விளையாட்டு அறிக்கையை வாசித்தார். தொடர்ந்து பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டன.
மல்லுார் கல்வி அறக்கட்டளை தலைவர் பழநிச்சாமி, செயலர் ராமச்சந்திரன், பொருளாளர் துரைசாமி, அறங்காவலர்கள் பெரியசாமி, குமார், பள்ளி நிர்வாக அலுவலர் வினோத்குமார், துணை முதல்வர் மீராமிஸ்ரா, விளையாட்டு ஆசிரியர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராதிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

