ADDED : அக் 13, 2025 03:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், கருப்பூர் அடுத்த கோட்டகவுண்டம்பட்டி ஹவுசிங்போர்டு வசந்தம் நகரில் வசிக்கும் இளையராஜா மனைவி மூகாம்பிகை, 37. இவர், சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.
நேற்று முன்தினம் அவர் வீட்டை பூட்டி விட்டு, குழந்தைகளுடன் பள்ளிக்கு சென்றவர், அன்றிரவு தாய் வீட்டுக்கு சென்று தங்கி, மறுநாள் வீடு திரும்பியுள்ளார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவும் உடைக்கப்பட்டு, அரை பவுன் மோதிரம், வெள்ளியால் ஆன, டம்ளர், 2 கப், குங்கும சிமிழ், ஸ்பூன் ஆகியவை திருடுபோயிருந்தது தெரிந்தது.அதன் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய். இதுகுறித்து அவர் புகார்படி, கருப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.