ADDED : ஜூலை 05, 2025 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார், ஓமலுார் அருகே பாகல்பட்டி, ஏரிக்கரை ஓரம் உள்ள பாலமுருகன் கோவில், ஒரு சமூகத்தினருக்கு சொந்தமானது. அங்கு கடந்த, 24ல், பூசாரி ரத்தினம், 45, கோவிலுக்கு வந்தபோது, முருகன் சன்னதியில் இருந்த,
ஒன்றரை அடி உயர வெள்ளி வேல் காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இதுகுறித்து, 26ல் அவர் புகார்படி, ஓமலுார் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.