/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிறை வார்டன்களின் பணி சுமையை குறைக்க பாடல் பாடி, ஆடி அசத்தல்
/
சிறை வார்டன்களின் பணி சுமையை குறைக்க பாடல் பாடி, ஆடி அசத்தல்
சிறை வார்டன்களின் பணி சுமையை குறைக்க பாடல் பாடி, ஆடி அசத்தல்
சிறை வார்டன்களின் பணி சுமையை குறைக்க பாடல் பாடி, ஆடி அசத்தல்
ADDED : நவ 12, 2024 07:05 AM
சேலம்: சேலம் மத்திய சிறையில், சிறை வார்டன்களின் பணியை பாராட்டி, கண்காணிப்பாளர் பாடல் எழுதி பாடியுள்ளார்.
தமிழகத்தில் ஒன்பது மத்திய சிறை உட்பட, 135 சிறைகள் உள்-ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வார்டன்கள் சிறைகளில் பணிபு-ரிகின்றனர். இந்நிலையில் சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் வினோத், வார்டன்களுக்காக பாடல் ஒன்றை எழுதி-யுள்ளார். 'வானம் போல உயர்ந்து நிற்கும் சுற்றுச்சுவர் இல்லை' என்ற தொடங்கும் இந்த பாடலை அவரே பாடியுள்ளார். உதவி சிறை அலுவலர் பிரபாகரன், ஏட்டுக்கள் சீனிவாசன், ஜெயமணி, சங்கீதா ஆகியோரும் பாடி, ஆடியுள்ளனர். இசை கலைஞர்களும் நடித்துள்ளனர்,
கோரிமேட்டை சேர்ந்த தினகரன் இசையமைத்-துள்ளார். இந்த பாடல், 4:40 நிமிடம் உள்ளது. இதுகுறித்து சிறை கண்காணிப்பாளர் வினோத் கூறுகையில்,''சிறையில் கைதிகளை பாதுகாத்து கண்காணிப்பது சுலபமானது இல்லை. கைதிகளை நல்வழிக்கு கொண்டு வர சிரமப்படுகிறோம், எப்போதும் பணி நிமித்தமாக உள்ள வார்டன்களுக்கு, இந்த பாடலால் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. தமிழக சிறை துறையில் முதன்முதலாக இந்த பாடலை பாடி நாங்கள் வெளியிட்டுள்ளோம்,'' என்றார்.