sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சார் - பதிவாளர் அலுவலகம் ப.பட்டி பிரிவில் கட்ட கோரிக்கை

/

சார் - பதிவாளர் அலுவலகம் ப.பட்டி பிரிவில் கட்ட கோரிக்கை

சார் - பதிவாளர் அலுவலகம் ப.பட்டி பிரிவில் கட்ட கோரிக்கை

சார் - பதிவாளர் அலுவலகம் ப.பட்டி பிரிவில் கட்ட கோரிக்கை


ADDED : டிச 15, 2025 06:28 AM

Google News

ADDED : டிச 15, 2025 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: தாதகாப்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து பிரித்து,

பனமரத்துப்பட்டி பிரிவில் புதி-தாக சார் பதிவாளர் அலுவலகம் கட்ட கோரிக்கை எழுந்துள்ளது.பனமரத்துப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட கம்-மாளப்பட்டி, தும்பல்பட்டி, குரால்நத்தம், திப்பம்-பட்டி, பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்து, பள்-ளிதெருப்பட்டி, பெரமனுார், கெஜ்ஜல்நாயக்கன்-பட்டி, நாழிக்கல்பட்டி, நிலவாரப்பட்டி, தாசநாயக்-கன்பட்டி உள்ளிட்ட பகுதி மக்கள், பத்திரப்பதி-வுக்கு உடையாப்பட்டி புறவழிச்சாலை அருகே உள்ள தாதகாப்பட்டி சார் - பதிவாளர் அலுவல-கத்துக்கு செல்ல வேண்டும். அந்த அலுவலகம், கம்மாளப்பட்டியில் இருந்து, 40 கி.மீ.,ல் உள்-ளதால் மக்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

புறவழிச்சாலையை கடந்து செல்ல வேண்டும் என்பதோடு, டவுன் பஸ் வசதியும் குறைவாக உள்ளது. குறிப்பாக முதியோர், விவசாய நிலம், வீட்டுமனை விற்பனை, வாங்குதல், வில்லங்க சான்று போன்ற பத்திரம் தொடர்பான வேலைக-ளுக்கு செல்லவே சிரமப்படுகின்றனர். அதுவும் முகூர்த்த நாட்களில், சீலநாயக்கன்பட்டி, தாத-காப்பட்டி, எருமா பாளையம் உள்ளிட்ட

பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பத்திரப்பதி-வுக்கு வருவதால், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளதால் ஒரு நாளே ஆகி விடுகிறது.

மேலும் சார் பதிவாளர் அலுவலகம் மலை அடி-வாரத்தில் உள்ளது. பத்திரப்பதிவுக்கு வரும் மக்கள் சொத்து விற்ற பணத்தை, வீட்டுக்கு கொண்டு செல்லவும், புறவழிச்சாலை போதிய பாதுகாப்பற்றதாக உள்ளது. அதனால் தாதகாப்-பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து, பனமரத்துப்பட்டி ஒன்றியத்தை பிரித்து, சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலை பனமரத்துப்பட்டி பிரிவில், புதிதாக சார் பதிவாளர் அலுவலகம் கட்ட, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us