/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வீடு புகுந்து குரங்குகள் அட்டகாசம்
/
வீடு புகுந்து குரங்குகள் அட்டகாசம்
ADDED : டிச 15, 2025 06:29 AM
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்து, 13வது வார்டில், ஏரி ரோடு பகுதியில் தாராபுளி கரடு உள்ளது. அங்கு பனமரத்துப்பட்டி போலீஸ் ஸ்டேஷன், குடியிருப்புகள், மளிகை கடை உள்-ளன. அந்த கரட்டில் ஏராளமான குரங்குகள் வசிக்-கின்றன. அவை உணவு தேடி, கரடு அடிவாரத்தில் உள்ள வீடுகள், கடைகள், போலீஸ் ஸ்டேஷன் உள்ளிட்ட இடங்களில் புகுந்து அட்டகாசம் செய்-கின்றன.
இதுகுறித்து மக்கள் கூறியதாவது:காலை, 6:00 முதல் மாலை, 6:00 மணி வரையில் குரங்குகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. வீட்டில் புகுந்து, சமைத்து வைத்துள்ள சாப்பாடு, அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை கொட்டி-விடுகின்றன. வேலைக்கு சென்றுவிட்டு இரவில் வரும்போது சாப்பாடு இல்லாமல் பட்டினியாக இருந்துள்ளோம். மொபைல் போன், துணி, டார்ச்லைட், கடலை டப்பா உள்ளிட்டவற்றை துாக்கிச்சென்றுவிடுகின்றன. வயலில் காய்கறி, பழங்கள், தேங்காய் உள்ளிட்டவற்றையும் விட்டு வைப்பதில்லை. கூண்டு வைத்து குரங்கை பிடித்து வேறு பகுதியில் விட, வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

