/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சொத்து தகராறு காரணமாக அக்கா, தம்பி கொடூர கொலை
/
சொத்து தகராறு காரணமாக அக்கா, தம்பி கொடூர கொலை
ADDED : அக் 15, 2024 07:11 AM
பனமரத்துப்பட்டி: சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி, ஒருவன்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜா, 40. இவருக்கு குள்ளப்பநாயக்கனுார் அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 படிக்கும் நவீனா, 17, என்ற மகளும், 9ம் வகுப்பு படிக்கும் சுகன், 14, என்ற மகனும் உள்ளனர்.
இவரது வீட்டின் அருகில், ராஜாவின் ஒன்று விட்ட சகோதரர் தனசேகரன் வீடும் உள்ளது. இருவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று மாலை, 6:45 மணிக்கு தன் வீட்டின் அருகில் உள்ள காட்டில் அரளி பூ பறிக்கும் பணியில், நவீனா மற்றும் சுகன் ஈடுபட்டு இருந்தார். அப்போது இருவரின் அலறல் சத்தம் கேட்டு, வீட்டிலிருந்த ராஜா அங்கு ஓடி வந்தார்.
அப்போது அங்கிருந்த தனசேகரன், கட்டையால் ராஜாவின் தலையில் தாக்கிவிட்டு தப்பியோடினார். அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த போது, நவீனா, சுகன் இருவரும் கழுத்தறுக்கப்பட்டு இறந்து கிடந்தனர்.
டி.ஐ.ஜி., உமா, எஸ்.பி., கவுதம் கோயல் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். இருவரது உடலையும் மீட்டு, பனமரத்துபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.