ADDED : செப் 13, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், மா.கம்யூ., அகில இந்திய முன்னாள் பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரி முதலாண்டு நினைவு தினம், சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று அனுசரிக்கப்பட்டது. நங்கவள்ளி ஒன்றிய செயலர் கிருஷ்ணவேணி தலைமை வகித்தார்.
சீதாராம் யெச்சூரி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, கண் தானம், உடல் தானம் செய்வதற்கான உறுதிமொழி பத்திரம் வழங்கி, 100க்கும் மேற்பட்டோர் பூர்த்தி செய்து வழங்கினர். கட்சி ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள்
பங்கேற்றனர்.
அதேபோல் ஏற்காட்டில், தாலுகா செயலர் நேரு தலைமையில் கட்சியினர், சீதாராம் யெச்சூரி படத்துக்கு மலர்துாவி அஞ்சலி
செலுத்தினர்.