ADDED : செப் 26, 2026 05:39 AM

அ நிறம் | அளவு
சேலம்; சேலம், கிச்சிப்பாளையம் ஹவுசிங் போர்டை சேர்ந்த, செந்தில் மனைவி தேவி, 45. இவர் வீடு அருகே, இரவில் சிலர் மது அருந்திவிட்டு அவ்-வப்போது தகராறு செய்து வந்ததால், அப்பகுதி மக்களுடன் சேர்ந்து தேவியும், அவர்களை மிரட்டி அனுப்பியுள்ளார்.
கடந்த, 20 இரவு, வீடு முன் அமர்ந்து தேவி பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த மது கும்பல், தேவியை காலால் உதைத்து, கட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துச்சென்றது. இதுகுறித்து தேவி புகார்படி, கிச்சிப்பாளையம் போலீசார் விசாரித்தனர்.அதில் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த முகமது, 20, பூவரசன், 26, கருணாஸ், 19, பட்டைக்கோவில் கவுதம், 25, கார்த்திக், 21, ஏ.டி.சி., டிப்போ பகுதி சுஜய், 20, ஆகிய, ஆறு பேர் என தெரிந்தது. அவர்-களை நேற்று, போலீசார் கைது செய்தனர்.
