தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கிணற்றில் குளித்த மாணவர் சேற்றில் சிக்கி உயிரிழப்பு

கிணற்றில் குளித்த மாணவர் சேற்றில் சிக்கி உயிரிழப்பு

கிணற்றில் குளித்த மாணவர் சேற்றில் சிக்கி உயிரிழப்பு


ADDED : செப் 26, 2026 05:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 05:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்;சேலம், மரவனேரியை சேர்ந்த பைரோஸ், கோவையில் காய்கறி லோடு ஏற்றும் பணி செய்-கிறார். இவரது மகன் முகமது பாசில், 17. அதே பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில், பிளஸ் 1 படித்தார். நேற்று மதியம், இரு நண்பர்க-ளுடன் வீராணத்தில் உள்ள, ஒரு நண்பர் வீட்-டுக்கு சென்றார். அங்கு, 4 பேரும் பேசிக்கொண்டி-ருந்தனர்.

தொடர்ந்து அருகே இருந்த கிணற்றுக்கு சென்-றனர். அப்போது ஒரு சிறுவன், 'இங்கு குளிக்க வேண்டாம்' என கூறியபோதும், முகமது பாசில், 'எனக்கு நீச்சல் தெரியும்' என கூறி கிணற்றில் குதித்தார். தொடர்ந்து இரு நண்பர்களும் குதித்-தனர். ஒருவர் மட்டும் குளிக்காமல், அருகே அமர்ந்திருந்தார்.இந்நிலையில் முகமது பாசில் மூழ்கிவிட்டார். நண்பர்கள் தகவல்படி, அங்கிருந்த மக்கள் வந்து தேடினர். தொடர்ந்து அவர்கள் தகவல்படி, வீராணம் போலீசார், தீயணைப்பு துறையினர் வந்து, சிறுவனை மீட்க முயன்றனர். ஆனால், 3 மணி நேரத்துக்கு பின், சேற்றில் சிக்கிய சிறு-வனை, சடலமாக மீட்டனர். மாணவனின் பெற்றோர் வந்து, உடலை பார்த்து கதறி அழு-தனர். வீராணம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us