/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சுப்ரமணியர் கோவிலில் அறுபத்து மூவர் திருவீதி உலா
/
சுப்ரமணியர் கோவிலில் அறுபத்து மூவர் திருவீதி உலா
ADDED : நவ 10, 2025 01:53 AM
சேலம்:பன்னிரு திருமுறை மன்ற அறக்கட்டளை சார்பில், 12ம் ஆண்டாக, சேலம், அம்மாபேட்டை செங்குந்தர் சுப்ரமணியர் கோவிலில், அறுபத்து மூன்று நாயன்மார் திருவிழா, நேற்று நடந்தது. காலை, 7:00 மணிக்கு விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர், அங்கையர்கண்ணி உடனுறை சொக்கநாதர் ஆகிய மூலவர் திருமேனிகளுக்கு அபி ேஷகம் செய்து சிறப்பு அலங்காரத்தில் பூஜை செய்யப்பட்டது.
தொடர்ந்து கோவை ஓதுவார் சகோதரர்கள் சுப்ரமணியன், தண்டபாணியின், திருமுறை இன்னிசையுடன் பொள்ளாப்பிள்ளையார், சோமாஸ்கந்த மூர்த்தி, உள்பட, 63 நாயன்மார்களின் உற்சவ திருமேனிகளுக்கு, பால், தயிர், சந்தனம் உள்பட, 16 வகை மங்கல பொருட்களால் பெருந்
திருமஞ்சனம் செய்யப்பட்டது.
மதியம், பேரொளி வழிபாடு, அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, அங்கையர்கண்ணி உடனுறை சொக்கநாதர், அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் உள்பட, 63 நாயன்மார்களும், சர்வ அலங்காரத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி, சிவ வாத்தியங்கள், வான வேடிக்கைகளுடன், முக்கிய வீதிகள் வழியே வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இரவு, 9:00 மணிக்கு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அறக்கட்டளையினர், செயல் அலுவலர் விமலா உள்ளிட்ட அறங்காவலர்கள்,
அர்ச்சகர்கள், சிவனடியார்கள்
செய்திருந்தனர்.

