ADDED : நவ 10, 2025 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏற்காடு,;காஞ்சிபுரத்தை சேர்ந்த தேசிங்கு மகன் முகேஷ், 21. நேற்று காலை, சேலம் மாவட்டம் ஏற்காடு வந்து, அங்குள்ள பஸ் ஸ்டாண்ட் அருகே தனியார் விடுதி
யில் அறை எடுத்து தங்கினார்.
முன்னதாக, விடுதி ஊழியர், அவரது தந்தை மொபைல் எண்ணை கேட்டு, அவரிடம் தகவல் தெரிவித்து அறை கொடுத்தார்.மாலையில் தேசிங்கு, விடுதி ஊழியரை தொடர்பு கொண்டு, 'மகன் நீண்ட நேரமாக மொபைல் போனை எடுக்கவில்லை' என்றார். விடுதி ஊழியர், அவரது அறைக்கு சென்று தட்டியபோது, கதவை திறக்கவில்லை. ஜன்னல் வழியே பார்த்தபோது, அவர், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. ஏற்காடு போலீசார், முகேஷ் உடலை கைப்பற்றி தேசிங்குவிடம் விசாரித்ததில், காதல் தோல்வியால் முகேஷ் சோகத்தில் இருந்தது தெரிந்தது. இருப்பினும் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

